2007-11-15

Project Madhurai - புத்தகக்களஞ்சியம்!

சமீப காலமாக தமிழ் நூல்களை இணையதளத்தில் தேடும் பணியை தொடங்கியுள்ளேன்। தற்போது வெளியாகியுள்ள மற்றும் வெளியாகிக்கொண்டிருக்கிற நூல்களில் உரிமம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருப்பதால், அவைகளை புத்தகங்களாக வாங்குவதே நமக்கும் நல்லது உரிமச்சட்டதிற்கும் நல்லது! இன்று நண்பர் ஒருவர் அனுப்பிய e-bookஐ அலசியபோது, எனது தேடலில் ஓரளவு தேர்ச்சி பெற்றுவிட்டதாக நம்புகிறேன்।

அந்த வலைதளம் இதுதான்... http://tamil.net/projectmadurai/। இந்த வலைதளத்தில் மின்பதிப்புகள் HTML மற்றும் PDF வடிவங்களில் உள்ளன। மேலும், உரிமம் சம்மந்தப்பட்டுள்ள பிரச்சனைகளும் இதில் இல்லை। வலைதளத்தில் உள்ள சில வாக்கியங்களை இங்கு மேற்க்கோள் காட்டியுள்ளேன்।

"...மதுரைத் திட்டம் உலகில் பல நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் அவரவர் தங்களது வீடுகளில் தனியார் கணினி கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களை கணினியில் உள்ளிட்டு (அ) பிழை திருத்தி மின்பதிப்புகளாக தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் இலக்கியங்களை மின்வழி பாதுகாத்து மற்றவர்களுடன் இலவசமாக பகிழ்ந்து கொள்வதில் விருப்புள்ள அனைவரும் இத்திட்டதில் பங்கு பெறலாம்"

நான் பார்த்த மின்பதிப்புகளிலும் "You are welcome to redistribute this file provided this header is kept intact" போன்ற வாக்கியங்கள் இருப்பதால், இத்தகைய மின்பதிப்புகளை மற்றவர்க்கும் அனுப்பலாம்.

எனக்கு பிடித்த பாரதியார் பாடல்களை பட்டியலில் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்। ஆனால், அவரது பாடல்களின் முதல் பாகம் சம்மந்தப்பட்ட link ஐ சொடுக்கியபோது "page not found" error! முடிந்தபோது வலைத்தளத்தின் webmasterக்கு எழுத வேண்டும்.

I leave it to you to explore to rest of the precious books in the site.

2007-11-08

Happy Deepavali :)

தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
முதல் முறையாக பட்டாசு, சங்கு சக்கரம் இல்லாம கொண்டாடின தீபாவளி இன்றைக்குதான். இங்க (மொன்றேஅல்) நம்ம சனம் கம்மி; அதுவும் தவிர பட்டாசெல்லாம் வெடிக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க. கடைல பலூன் வாங்கி ஊசியால குத்தி வெடிக்க வேண்டியதுதான்! :)
போன postல எழுதினதால, கொஞ்சம் BLOG உலா போய்ட்டு வந்தேன். Metroblogging sites were good. Especially, the participation in http://chennai.metblogs.com/ was comparatively better when compared to other Indian Metroblogging sites. நம்ம பசங்க அடிச்சிகிட்டாலும் (read Diwali/Deepavali in Nandhu's post.) எல்லாத்துலயும் நல்லா participate பண்ணறாங்க. Real good concept and useful as well! நம்ம வேலை அப்பப்போ comments எழுதறதுதான். இப்போ மெட்ராஸ்ல இல்லாததுனால city-இன் குணாதிசயங்களை கண்கூடா பாக்க முடியறது இல்லை. சென்னை வந்தப்புறம் நல்ல content -ஆ எழுதலாம்னு இருக்கேன்.
இன்னும் மத்த BLOG எல்லாம் பாத்து, கொஞ்சம் யோசிச்சு அடுத்த வாரம், கொஞ்சம் டைம் கிடைக்கும்போது, மீண்டும் சந்திப்போம்!

2007-11-06

Break...

ஒரு BLOG create பண்ணிட்டோம்கறதுனால அதுல என்ன வேணும்னாலும் எழுதிடலாம்ங்கறது தப்பு! சில Do's and Don't's இதுலையும் இருக்குன்னு சில 'நல்ல' BLOGs browse பண்ணினதுக்கப்புறம்தான் தெரிஞ்சது.

அதுவும் தவிர, ஒரு நல்ல ரசிகன்தான் நல்ல கலைஞனாக முடியும். அந்த பட்சத்தில் நானும் அப்படியே உருவாக ஆசைப்படுகிறேன். அதனால் BLOG -இயலில் கொஞ்சம் தேர்ச்சி பெற்ற பிறகு இங்கு திரும்பி வருவேன்.

As we say in English, 'watch this space for more, in near future!'

2007-11-05

என் முதல் BLOG

அப்படி இப்படி ஒரு சின்ன கடவுள் வாழ்த்து பாடி இந்த BLOGஐ ஆரம்பிச்சாச்சு! இனிமே என்ன எழுதணும், எப்படி எழுதனும்னு முடிவு செய்யணும்!

இது தெரியாம ஏன்டா BLOGஐ ஆரம்பிச்சேன்னு கேட்காதீங்க! ஒரு 'பொறி' (கடலை பொறி இல்லை!) உருவாகிடுச்சுன்னா அப்போ உட்கார்ந்துகிட்டு BLOG create பண்ணினா 'பொறி' ஆறிடும்லே! :o)

சொந்தக்கதை சோகக்கதை எழுதி பெரிய பிளேடு போட விருப்பம் இல்லை.. உருப்படியான எதாவது சரக்கை எழுதலாம்னு பார்க்கிறேன்! இந்த BLOG தமிழ் மற்றும் English ஆகிய இரண்டு மொழிகளிலும் எனது கருத்தை மற்றும் என்னை பிரதிபலிக்கும்!

தட்டிக்கொடுப்பவர்களும் கன்னத்தில் அறைபவர்களும் என்னை ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்! சமுதாயத்துக்கும் எனக்கும் உண்மையா நடந்துப்பேன் என்கிற நம்பிக்கையில் எனது எழுத்து பிரயாணத்தை தொடங்குகிறேன்...