2008-11-15

புத்தியுள்ள மனிதரெல்லாம்...

தெருவோரப் பிச்சைக்காரன்...
மனது: காசு போடு... கோடி புண்ணியம்!
புத்தி: திரும்பிக் கூட பார்க்காதே! பிச்சை போட்டால் மறுபடியும் பிச்சை எடுப்பான்!

நடு வீதியில் விபத்து...
மனது: ஐயோ பாவம்! கவனிப்பாரற்று கிடக்கிறானே! அவனை தூக்கியாவது விடுவோமே!
புத்தி: எதுக்கு தேவை இல்லாத வம்பு? இவனை தூக்கினால் அழுக்கு / ரத்தம் ஒட்டும். ஆயிரம் வேலை இருக்கு. மூடிட்டு கிளம்பு!

செய்தியில் சர்வதேசக் கயவர்களின் சேட்டை...
மனது: இவங்களுக்கெல்லாம் ஒரு முடிவே கெடயாதா? எல்லாரையும் நடுத்தெருவில் நிக்க வெச்சு சுடணும்.
புத்தி: இவங்கள சுட்டா? இவன் மாதிரி ஆயிரம் பேர் வருவாங்க. எல்லாரையும் சுட முடியுமா? அப்படியே நீ சுட்டாலும் உன்னையும் அவங்கள்ள ஒருத்தனாதான் பார்ப்பாங்க. நீ ஒழுங்கா மூடிட்டு இரு!

அலுவலகச் செய்தி! இந்த வருடம் ஊக்கத்தொகை இல்லை...
மனது: அய்யய்யோ! இத நம்பி வீட்டுக் கடனை கொஞ்சம் அடைக்கலாம்னு இருந்தோமே!
புத்தி: இப்போசதைக்கு வேலைல இருக்கறதே நல்ல விஷயம்! மூடிட்டு வேலைய பார்!

வோட்டுச் சாவடி...
மனது: எதுல குத்த? இல்லை எத அழுத்த? எல்லாம் ஒரே கூட்டம் தானே?
புத்தி: இப்போதான் ஒழுங்கா யோசிக்கறே! ஆனா எனக்கு இங்க வேலை இல்லை!

என்னத்த சொல்ல...

No comments: